புதுடெல்லி, 26 மார்ச் 2026 : 2026-27 நிதியாண்டுக்கான நிதி மசோதா தொடர்பாக மக்களவையில் விரிவான விவாதம் நடைபெற்றது. இதில் அரசின் 32 திருத்தங்கள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பான அனைத்து நடைமுறைகளும் மக்களவையில் நிறைவடைந்துள்ளன. தற்போது இந்த மசோதா மாநிலங்களவையின் பரிசீலனையில் உள்ளது. அங்கும் இது நிறைவேற்றப்பட்டால், பட்ஜெட் செயல்முறை முழுமையாக முடிவுக்கு வரும்.
மத்திய பட்ஜெட்டின் படி, 2026-27 நிதியாண்டில் மொத்த அரசுச் செலவினம் ரூ.53.47 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய நிதியாண்டை விட 7.7% அதிகமாகும்.
மேலும், அடுத்த ஆண்டுக்கான மூலதன செலவினம் ரூ.12.2 லட்சம் கோடியாகவும், நிதி பற்றாக்குறை 4.3% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.





