என் தமிழ்

2026 டெல்லி சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்

புதுடெல்லி, 26 மார்ச் 2026 : டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா இன்று விமரிசையாக தொடங்கியது. இந்த தொடக்க நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ரேகா குப்தா, நடிகைகள் ஹேமா மாலினி, ஷர்மிளா தாகூர், கங்கனா ரணாவத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழாவை குத்துவிளக்கேற்றி அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தனர். இந்த பிரமாண்ட விழாவில் இந்திய திரைப்படங்களுடன் வெளிநாட்டு படங்களும் திரையிடப்படவுள்ளன.

இன்று தொடங்கிய இந்த திரைப்பட விழா வரும் 31-ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறும். பல்வேறு மொழிகள் மற்றும் பல வகை திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளதால், திரை ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

இந்த விழா டெல்லியில் முதல் முறையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அமைச்சர் மன்ஜிந்தர் சிங், டெல்லிக்கு இது ஒரு முக்கிய தொடக்கம் என்றும், எதிர்காலத்தில் திரைத் துறை நடவடிக்கைகள் டெல்லியுடன் மேலும் இணையும் எனவும் தெரிவித்துள்ளார்.

Scroll to Top