என் தமிழ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.15,290 கோடிக்கு விற்பனை

புதுடெல்லி, 24 மார்ச் 2026 : 10 அணிகள் பங்கேற்கும் 19வது ஐபிஎல் தொடர் வரும் 28ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை இந்தியாவின் பல நகரங்களில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அதன் உரிமையாளர் விற்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, அமெரிக்க தொழில் அதிபர் கல் சொமானி தலைமையிலான முதலீட்டாளர் குழு, அந்த அணியின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் சுமார் 1.63 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.15,281 கோடி) மதிப்பில் நடைபெற்றுள்ளது.

இந்த முதலீட்டு குழுவில் வால்மார்ட் நிறுவனத்தை சேர்ந்த ராப் வால்டன் மற்றும் போர்டு நிறுவனத்தின் ஹாம்ப் குடும்பத்தினரும் இணைந்துள்ளனர். 2026 ஐபிஎல் தொடர் முடிவடைந்த பிறகு, புதிய உரிமையாளர்களின் கட்டுப்பாட்டிற்கு அணி மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top