என் தமிழ்

சமையல் எரிவாயு ஏற்றிய மேலும் 2 இந்திய கப்பல்கள் ஹார்மூஸ் நீரிணையை கடக்கத் தொடங்கின

புதுடெல்லி, 24 மார்ச் 2026 : ஹார்மூஸ் நீரிணை பகுதியில், மேற்கு பக்கத்தில் 24 கப்பல்களும், கிழக்கில் 4 கப்பல்களும் காத்திருந்தன. இந்தியாவின் ராஜதந்திர முயற்சிகளால், ‘ஷிவாலிக்’ மற்றும் ‘நந்தா தேவி’ என்ற இந்திய கப்பல்கள் சமீபத்தில் நீரிணையை கடக்க அனுமதி பெற்றன. அவை 92,712 டன் சமையல் எரிவாயுவுடன் குஜராத் துறைமுகங்களுக்கு பாதுகாப்பாக சென்றடைந்தன.

இந்நிலையில், மேலும் இரண்டு இந்திய கப்பல்கள் ஹார்மூஸ் நீரிணையை கடக்கத் தொடங்கியுள்ளன. ‘பைன் கியாஸ்’ மற்றும் ‘ஜேக் வசந்த்’ என்ற இந்த கப்பல்கள் சமையல் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு நேற்று பாரசீக வளைகுடாவில் இருந்து பயணத்தை தொடங்கின. இரு கப்பல்களும் ஒன்றாக அருகருகே செல்கின்றன.

தற்போது, அவை ஈரானின் லாரக் மற்றும் கேஷம் தீவுகளுக்கு இடையிலான கடற்பகுதியில் பயணம் செய்து வருவதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், தங்களது அடையாளம் ஈரான் அதிகாரிகளுக்கு தெளிவாக தெரியும் வகையில் அவை முன்னேறி வருகின்றன.

Scroll to Top