என் தமிழ்

ஈரான்–அமெரிக்கா போர் முடிவா? சனிக்கிழமை பேச்சுவார்த்தை என டிரம்ப் அறிவிப்பு

நியூயார்க்,  24 மார்ச் 2026 : ஈரானுடன் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் மீது நடைபெறும் தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளார்.

மேற்காசிய மோதலின் ஒரு பகுதியாக, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து நடந்த தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு பதிலடியாக, ஈரானும் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா., உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இருப்பினும், மூன்று வாரங்களுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஈரானின் அணு உலைகள் மற்றும் எரிசக்தி அமைப்புகள் மீது நடைபெறும் ராணுவ தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “ஈரானுடன் விரைவில் உடன்படிக்கை ஏற்படும். சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். ஹார்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும். இது போர் அல்ல, ராணுவ நடவடிக்கை. ஈரான் அணு ஆயுதங்களை பயன்படுத்தாது என உறுதி அளித்துள்ளது. அமெரிக்காவும் ஈரானும் இணைந்து ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்கும்” என்றார்.

இதன் மூலம், ஈரான்–அமெரிக்க மோதல் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Scroll to Top