சென்னை, 23 மார்ச் 2026 : சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார் நடித்த ‘தாய் கிழவி’ திரைப்படம் கடந்த 27ஆம் தேதி வெளியானது. நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியன், முத்துக்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை ஜியோ ஹாட்ஸ்டாரும் பெற்றுள்ளன. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்தில், ராதிகா சரத்குமார் முதிர்ந்த தோற்றத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமூக கருத்தை நகைச்சுவையுடன் சொல்லும் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ‘தாய் கிழவி’ திரைப்படம் 25 நாட்களில் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.





