புதுடெல்லி, 23 மார்ச் 2026 : ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் மேற்காசியத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானும் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. மூன்று வாரங்களாக நீடிக்கும் இந்த மோதலில், இரு தரப்பிலும் கடும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ பாதுகாப்பு அமைப்பை மீறியும், ஈரானின் ஏவுகணை தாக்குதல்கள் ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார், அவர் தற்போது நிலைமையான நிலையில் உள்ளார். இதுவரை 6 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர், ஒருவர் காயம், ஒருவர் மாயம் ஆகிய தகவல்கள் கிடைத்துள்ளன. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்றார்.





