சென்னை, 23 மார்ச் 2026 : 19வது ஐபிஎல் தொடர் வருகிற 28ஆம் தேதி ஆரம்பமாகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது முதல் போட்டியில் மார்ச் 30ஆம் தேதி கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளுகிறது.
இதனை முன்னிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்த சி.எஸ்.கே. அணியினர் ‘ரோர் 26’ என்ற பெயரில் முதல் முறையாக மெகா ரசிகர் நிகழ்ச்சியை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சி.எஸ்.கே. அணியின் முன்னாள் நட்சத்திரங்கள் சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹைடன், முரளி விஜய், பத்ரிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் தற்போதைய அணியினருடன் சேர்ந்து காட்சி போட்டி மற்றும் பல்வேறு சுவாரஸ்ய நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.
மேலும், கலை நிகழ்ச்சிகளும் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன. தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நேரடி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயனும் பங்கேற்கிறார்.





