என் தமிழ்

8 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் நடிகை அனுஷ்கா சர்மா மீண்டும் வருகிறார்

மும்பை, 23 மார்ச் 2026 : இயக்குனர் அட்லீ இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்ட செலவில் புதிய படம் உருவாகி வருகிறது. இதில் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோரும் இப்படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்த பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, இந்த படத்தின் மூலம் மீண்டும் திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா, 2018ல் வெளியான “ஜீரோ” படத்திற்குப் பிறகு எந்தப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர், தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துகிறார்.

Scroll to Top