என் தமிழ்

நவீன ஏவுகணைகளுடன் ஹார்மூஸ் அருகே பிரிட்டிஷ் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் – பதற்றம் அதிகரிப்பு

லண்டன், 23 மார்ச் 2026 : ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் காரணமாக உலகளவில் எண்ணெய், எரிவாயு வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஈரான், நட்பு நாடுகளைத் தவிர மற்ற கப்பல்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. அதனை மீறும் கப்பல்கள் தாக்கப்படும் அபாயமும் உள்ளது; அணு ஆயுத பயன்பாட்டிற்கான அச்சமும் நிலவுகிறது.

இந்த சூழலில், அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இங்கிலாந்து செயல்பட முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, நவீன ஏவுகணைகளுடன் எச்.எம்.எஸ். ஆன்சன் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஹார்மூஸ் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் 1,600 கி.மீ. தூரம் தாக்கும் தோமஹாக் பிளாக் 4 ஏவுகணைகள் மற்றும் கனரக தொர்பிடோ ஆயுதங்கள் உள்ளன. வடக்கு அரபிக்கடல் பகுதியில் அது இயங்குவதாக தகவல். மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கப்பல்கள் அதிகரித்ததால், அப்பகுதியில் பதற்றம் மேலும் உயர்ந்துள்ளது.

Scroll to Top