ஆக்லாந்து, 20 மார்ச் 2026 : தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, நியூசிலாந்தின் கட்டுப்பாட்டான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. எந்த வீரரும் 30 ரன்களை கடக்காத நிலையில், அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜேமிசன், சாண்ட்னர், சியர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
137 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. டாம் லாதம் 63 ரன்களும், கான்வே 39 ரன்களும் எடுத்தனர்.
இதன் மூலம் நியூசிலாந்து அணி 16.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.




