நட்பு கால்பந்து போட்டி: அர்ஜென்டினாவிடம் ஜெர்மனி வீழ்ந்தது

நட்பு கால்பந்து போட்டி: அர்ஜென்டினாவிடம் ஜெர்மனி வீழ்ந்தது

Argentina

இந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி 1–0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் இரு அணிகள் மோதிய நட்பு ரீதி போட்டி ஜெர்மனியில் நேற்று நடந்தது.

இதில் காயம் காரணமாக அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி விளையாடவில்லை. இருந்தபோதிலும் அந்த அணி வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

21–வது நிமிடத்தில் அர்ஜென்டினா முதல் கோலை போட்டது. பின்னர் அடுத்தடுத்து கோல்கள் அடித்தது. 50–வது நிமிடம் முடிந்தபோது அர்ஜென்டினா 4–0 என்ற கோல் கணக்கில் இருந்தது. கடைசி கட்டத்தில் ஜெர்மனி 2 கோல்கள் போட்டது. ஆட்ட நேர முடிவில் 4–2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வென்றது. இந்த வெற்றிமூலம் உலக கோப்பை தோல்விக்கு ஜெர்மனியை அர்ஜென்டினா பழி தீர்த்தது.