பர்மிங்காம், 07 மார்ச் 2026 : இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்ஷ்யா சென் சிறப்பான ஆட்டம் வெளிப்படுத்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்ஷ்யா சென், சீனாவின் லீ ஷிபெங் எதிர்த்து களமிறங்கினார். போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லக்ஷ்யா சென் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முதல் செட்டை 21–13 என்ற கணக்கில் கைப்பற்றிய அவர், தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 21–16 என்ற கணக்கில் வென்றார். இதன் மூலம் நேரடி செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தினார். இந்த வெற்றியால் ஆல் இங்கிலாந்து ஓபன் தொடரில் இந்திய ரசிகர்களுக்கு லக்ஷ்யா சென் மேலும் நம்பிக்கை அளித்துள்ளார்.





