என் தமிழ்

தென் ஆப்பிரிக்காவில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறது ஆஸ்திரேலியா

சென்னை, 24 பிப்ரவரி 2026 : ஆஸ்திரேலிய அணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறது. இந்த தொடர் வரும் அக்டோபர் 9 முதல் தென் ஆப்பிரிக்காவில் துவங்க உள்ளது.

2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட பந்த் சேதப்படுத்தல் (Ball-Tampering) விவகாரம் உலக கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் டேவி வார்னர், ஸ்மித் மற்றும் கேமரன் பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டனர்.

இதன் பின்விளைவாக, கிரிக்கெட் ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுத்து ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஒரு வருட தடையும், பான்கிராப்டுக்கு ஒன்பது மாத தடையும் விதித்தது. அந்த சர்ச்சைக்குப் பிறகு 8 ஆண்டுகள் கடந்த பின்னரும், தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் களமிறக்கப்படுவதை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.

Scroll to Top