என் தமிழ்

இனி `கேரளா’ அல்ல.. மாநிலத்தின் பெயர் மாற்றம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி, 24 பிப்ரவரி 2026 : இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்டில் முதல்வர் பினராயி விஜயன் மாநில சட்டமன்றத்தில் முன்னெடுத்தார்.

இந்த தீர்மானம் முதலில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டாலும், திரும்பிய பின்னர், 2024ஆம் ஆண்டு மறுபடியும் மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற வலியுறுத்தி 2-வது முறையாக சட்டசபை அதை நிறைவேற்றியது.

இதன் பின்னர் சேவா தீர்த் வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், கேரளத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Scroll to Top