என் தமிழ்

புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்பட விருதுக்கு “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” தேர்வு

புதுச்சேரி, 10 பிப்ரவரி 2026 : ‘ஜிகர்தண்டா’ திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, எட்டு ஆண்டுகள் கழித்து அதன் தொடர்ச்சியாக ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ உருவாக்கப்பட்டது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

புதுச்சேரி அரசு வழங்கும் 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட விருதுக்கு கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி அரசின் திரைப்பட விழா வரும் 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் வழங்கப்படும் விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் அளிக்கப்படுகிறது.

அதேபோல், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் ‘லைம்லைட்’ பிரிவில் ஏற்கனவே இடம்பிடித்துள்ளது. மேலும், கோவாவில் நடைபெற்ற 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top