திருப்பதி, 10 பிப்ரவரி 2026 : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 கட்டண தரிசனத்திற்காக பக்தர்கள் சில மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில், இலவச தரிசனத்திற்காக பல மணி நேரம் வரிசையில் நிற்கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மட்டும் 81,894 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நாளில் 24,754 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். மேலும், ஒரே நாளில் உண்டியல் மூலம் கிடைத்த காணிக்கை ரூ.3 கோடியே 91 லட்சமாக பதிவாகியுள்ளது.





