மஇகா தலைவர் பதவியில் இருந்து விலகுங்கள்:டி.மோகன்

மஇகா தலைவர் பதவியில் இருந்து விலகுங்கள்:டி.மோகன்

palanivel-1

மலேசிய இந்தியர்களுக்கு சேவை செய்ய முடியாவிட்டால் மஇகா தலைவர் பதவியில் இருந்து விலகுங்கள் என்று அக்கட்சியின் இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் டத்தோ டி.மோகன் கூறியுள்ளார்.ஜி.பழனிவேல் அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய முடியாவிட்டால் பதவி விலகுவது நல்லது என்று டி.மோகன் கூறியுள்ளார்.

செனட்டர் பதவிக்குக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை செனட்டராக நியமனம் செய்வதில் தாமதம் காட்டிவரும் திரு.பழனிவேல் இதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை காரணம் காட்டுவது டி.மோகனை ஆத்திரம் அடைய செய்திருக்கிறது.