கோலாலம்பூர், 17 அக்டோபர் 2025 : கோலாலம்பூரின் பிரிக்க்ஃபீல்ட்ஸ் பகுதியில் அமைந்துள்ள ராசி சில்க் பேலஸ் (RAAJI Silk Palace) இன்று பெருமைக்குரிய ஒரு மைல்கல்லை எட்டியது. இந்நிறுவனம் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இரண்டு சாதனைகளைப் பதிவு செய்து, அதன் துவக்க விழாவை சிறப்பாகக் கொண்டாடியது.
இந்நிகழ்ச்சி டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன், மாண்புமிகு துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ( ஒருமை பாடு துணை அமைச்சர்) ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ராசி சில்க் பேலஸின் இந்த இரு சாதனைகளும் மலேசிய வணிகத்துறையில் ஒரு பெருமையான அங்கீகாரமாக அமைந்துள்ளது.
இந்த விழா 17 அக்டோபர் 2025, வெள்ளிக்கிழமை மதியம் 3.00 மணிக்கு ராசி சில்க் பேலஸ், பிரிக்ஃபீல்ட்ஸ், கோலாலம்பூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊடகப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்; தொடர்ந்து ஊடகங்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றியறிவாக அனைத்து ஊடகப் பிரதிநிதிகளுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறந்த தரம், புதுமை மற்றும் பாரம்பரியத்தை இணைத்து வரும் ராசி சில்க் பேலஸ், மலேசியாவின் பட்டு ஆடைத் துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக பெருமையுடன் திகழ்கிறது.
Raaji Silk Palace Two Malaysia Book Of Records – Saraswathy Kandasami





