என் தமிழ்

சிரம்பானில் திருமதி. கவிதா ஏற்பாட்டில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி

சிரம்பான், 22 ஜூன் 2025 : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிரம்பானில் உள்ள ராயல் சுங்கை உஜாங் கிளப்பில் 21 ஜூன் 2025 அன்று காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை ஆரோக்கிய வாழ்விற்கான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. நடன கலைஞரும், யோகா குருவுமான திருமதி கவிதா சுப்ரமணியன் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் சுமார் 50 நபர்கள் கலந்து கொண்டு யோகாசனங்கள் செய்தனர்.

பல்லினத்தவர் கலந்துகொண்ட இந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுக்கு மனதிற்கும் உடலுக்கும் பயன் தரக்கூடிய பல யோகாசன வழிமுறைகள் குறித்து திருமதி கவிதா அவர்கள் பயிற்சி அளித்தார்.

Scroll to Top