என் தமிழ்

“நண்பா” திட்டம்: இந்திய இளைஞர்களுக்காக ஒரு விழிப்புணர்வு மேடையாக வருகிறது

கோலாலம்பூர் 22 ஜூன் 2025 – நாடி ஆஸ்பிராசி நாசியோனல் பெர்சாமா ஆனக் மூடா (Nadi Aspirasi Nasional Bersama Anak Muda)அல்லது சுருக்கமாக நண்பா (NANBA) என அழைக்கப்படும் இளைஞர் நிகழ்ச்சி, 28 ஜூன் 2025 (சனிக்கிழமை) அன்று கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சி, தகவல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சமூகத் தொடர்புத் துறை (J-KOM) இன் தலைமையில் நடக்கவுள்ளது. “நண்பா” என்பது தமிழில் நண்பன் என்பதைக் குறிக்கும் சொல்லாகும். இந்நிகழ்ச்சி, இந்திய சமூகத்துடன் அரசாங்கத்தின் உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாகும்.

இந்திய இளைஞர்களின் தனிநபர் வளர்ச்சி மற்றும் அரசுத் திட்டங்களைப் புரிந்துகொள்ளும் விழிப்புணர்வு உருவாக்கல், அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகள், கொள்கைகள் மற்றும் சேவைகள் குறித்த தகவல்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தல் மற்றும் இணைய பாதுகாப்பு மற்றும் சமூக ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை பரப்புதல் போன்றவையே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

நிகழ்ச்சி விவரங்கள்
இடம்: மெர்பாவ் மண்டபம், IWK இக்கோ பார்க், லெம்பாஃ பந்தாய்
நாள்: 28 ஜூன் 2025 (சனிக்கிழமை)
நேரம்: காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

துவக்கவிழா விருந்தினர்
YB டத்தோ ஃபாஹ்மி பாஜில், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் அமைச்சர்

நிகழ்வில் முக்கிய அங்கங்களாக புதையல் வேட்டையாட்டம், வினா–விடை போட்டி, அரசும் தனியாரும் இணைந்து வழங்கும் சேவைகள் மற்றும் கண்காட்சிகள், சிறுவர் வண்ணம் தீட்டும் போட்டி, McDonald’s உடன் மகிழ்ச்சி நிகழ்வு, ரஹ்மா மடானி நியாய விற்பனை மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கல் ஆகியவை

இந்த நிகழ்ச்சி, மலேசியா மடானி மதிப்பீடுகளை முன்னிறுத்தி, இந்திய இளைஞர்களை ஆற்றல் மிக்க சமூக தலைவர்களாக மாற்றிட உதவும் ஓர் அரிய சந்தர்ப்பமாக அமைய உள்ளது.

மக்கள் பங்கேற்க வரவேற்கப்படுகிறார்கள். நுழைவு இலவசம்

Scroll to Top