புத்ராஜெயா, 21 ஜூன் 2025 – உலக யோகா நாளை முன்னிட்டு இன்று காலை புத்திராஜெயா வேட்லன்ட்ஸ் பூங்காவில் *“Yoga Walk for Peace & Harmony”*எனும் தலைப்பில் அமைதியும் ஒற்றுமையும் பெரிதும் வலியுறுத்தும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அதிகாலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை பலர் கலந்து கொண்டனர். யோகாவின் உடல், மன நலன்களை எழுப்பும் இந்த நடைபயணம், மன அமைதி மற்றும் சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்தது.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களாக
வரவேற்பு மற்றும் ப்ரீ-வார்ம் அப்
மெல்லிய உடல் நெகிழ்ச்சி பயிற்சி, மூச்சு விழிப்புணர்வு ஆகியவை நிகழ்ந்தன.
சூரிய நமஸ்காரம்
மூன்று சுற்றுகள் சூரிய நமஸ்காரம் பயிற்சி மூலம் பக்தியும் பலனும் ஒருங்கிணைக்கப்பட்டது.
அமைதிக்காக 3 கி.மீ நடை
பங்கேற்பாளர்கள் விழிப்புடன் நடைபயணம் செய்து இயற்கையோடு ஒன்றாக முடிவடையும் அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர்.
பிராணாயாமா மற்றும் சவாசனா
மூச்சுப்பயிற்சிகள் மற்றும் உடல் தளர்ச்சி பயிற்சிகள் மூலம் மன அழுத்தம் நீக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
நிறைவு மற்றும் உறுதியளிப்பு
குழு புகைப்படம் எடுக்கப்பட்டதும், @One heart studio வழங்கிய இலகுரகாசாரம் மற்றும் Vearthkeya வழங்கிய கொண்டைக்கடலைக் காபி பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி, யோகாவின் மூலம் ஒருங்கிணைப்பு, அமைதி மற்றும் ஆரோக்கியத்தை பரப்பும் நோக்கத்துடன் நடந்த முக்கியமான சமூக நிகழ்வாகும்.










