கூச்சிங், 02/04/2025 : சிலாங்கூர், புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்கு புதிய சில தற்காலிக நிவாரண மையங்களைத் திறக்க சமூக நல துறை, ஜேகேஎம்மிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசல் மட்டுமே பிபிஎஸ்-ஆக பயன்படுத்தப்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நாட்களுக்கு அங்கு தங்க வைக்க முடியாது என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி தெரிவித்தார்.
இன்று காலை 11 மணி நிலவரப்படி இப்பேரிடரில் பாதிக்கப்பட்ட 484 பேர் ஜேகேஎம்-இல் பதிவு செய்துள்ளனர்.
மேலும், சிலர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அனைவரும் பிபிஎஸ்-இல் தங்கவைக்கப்படவில்லை.
இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் பொருள் உதவி வழங்க விரும்புபவர்கள் அவற்றை வைப்பதற்கான இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் அந்த முயற்சியை ஒத்தி வைக்குமாறு பொது மக்களையும் நிறுவனங்களையும் டத்தோ ஶ்ரீ நேன்சி கேட்டுக் கொண்டார்.
Source : Bernama
#PetronasGasPipelineAccident
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews