புத்ரா ஹைட்ஸ், 02/03/2025 : புத்ரா ஹைட்ஸில், எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் வீடுகளையும் உடமைகளையும் இழந்த மக்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
வெடிப்பு நிகழ்ந்தவுடன் உடனடியாக வெளியேறிய அவர்கள், இன்று காலை செக்ஷன் 1/3ப புத்ரா ஹர்மோனியில், தங்களது வீடுகளின் நிலைமையை அறிந்துக் கொள்வதற்கு குடியிருப்பு பகுதியின் வெளியே காத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அப்பகுதியின் காலை நிலவரங்களையும் மக்களின் எதிர்பார்ப்புகளையும் பெர்னாமா செய்திகள் கண்டறிந்தது.
இன்று காலை மணி 8.00 தொடங்கி, குடியிருப்பு பகுதியின் வெளியே உள்ள கூடாரங்களின் அங்குள்ள வீடுகளின் உரிமையாளர்கள் உள்ளே நுழைவதற்கு தயாராக இருந்தனர்.
எனினும், உடனடியாக அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மாறாக, மக்களின் பாதுகாப்பு கருதி கட்டம் கட்டமாக உள்ளே நுழைவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக அரச மலேசிய போலீஸ் படை PDRM தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுப்பதற்காக மக்களை, தங்களின் வீடுகளுக்கு அனுப்பும் செயல்முறைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதனிடையே, திடீரென்று வீடுகளில் இருந்து வெளியேறியதால் செய்வதறியாது தவிப்பதோடு, தங்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருப்பதாக சிலர் பெர்னாமாவிடம் கூறினர்.
”இப்போதும் விசாரணைகள்,ஆய்வுகள் நடந்துக் கொண்டிருக்கின்றது. நாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம். ஏனென்றால், தற்போது வீடுகளும் பாதைகளும் சரியில்லை என்று நாங்கள் கேள்விப்பட்டோம். எட்டு மணியில் இருந்து காத்துக் கொண்டிருக்கின்றோம்,” என்றனர்.
”உண்மையாகவே கஷ்டமாக உள்ளது. இங்கும் அங்கும் பயணிப்பதற்கு. நேற்று ஒரு தீர்வு கிடைக்கும் என்று நினைத்தோம். இன்னும் தீர்வுக் காணப்படவில்லை. தற்போது இடமும் வழக்கத்திற்கு மாறாக கடும் வெப்பமாக உள்ளது,” என்று தெரிவித்தனர்.
மற்றொரு நிலவரத்தில், வெடிப்பின் போது ஏற்பட்ட கடுமையான வெப்பம் காரணத்தினாலும் சில குடும்பங்கள் அங்கிருந்த வெளியேறின.
அதன் பின்னர், வீட்டின் நிலைமை மற்றும் உடமைகள் குறித்து தெரியவில்லை என்று வருந்தினர்.
தற்காலிக நிவாரண மையங்கள் அல்லது உறவினர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் அவர்கள், சம்பவ இடத்திற்கு வந்துச் செல்வதும் சற்று சிரமாக இருப்பதாகவும் கூறினர்.
”அப்போது வீடு பாதிக்கப்படவில்லை என்றாலும் என்ன நிலைமை என்று தெரியவில்லை. வாகனங்கள் மற்றும் உடமைகளுக்கு என்ன நிகந்தது என்று தெரியவில்லை. ஏனென்றால், கடைசி பாதையில் எங்களது வீடு உள்ளது. இப்போதுதான் கட்டம் கட்டமாக உள்ளே செல்ல அனுமதி அளிக்கின்றனர்,” என்று தெரிவித்தனர்.
போலீஸ் அதிகாரிகளின் கூடாரத்தின் உள்ள முகப்பில் பதிவு செய்யப்பட்டப் பின்னர், மக்கள் கட்டம் கட்டமாக குடியிருப்பு பகுதியில் உள்ளே அனுப்பப்பட்டதை பெர்னாமா செய்திகளின் கண்ணோட்டத்தில் தெரிய வந்தது.
Source : Bernama
#PetronasGasPipelineAccident
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews