புத்ரா ஹைட்ஸ், 02/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களைப் பெற தேசிய பதிவுத் துறை களமிறக்கப்படும்.
இச்சம்பவத்தின்போது சுய ஆவணங்களை இழந்த பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை எளிதாக்க இந்த நடவடிக்கை உதவும் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நோராய்னி அஹ்மட் தெரிவித்தார்.
”ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் அடையாள அட்டை உட்பட இன்னும் சில முக்கிய ஆவணங்கள் இல்லாமல் வெளியேறியுள்ளனர். எனவே தேவைப்படுவோர் எளிமையான முறையில் தங்களின் ஆவணங்களை மீண்டும் பெறுவதற்கு அவர்களுக்காக முகப்பு திறப்போம்,” என்றார் அவர்.
இன்று, புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.
இச்சம்பவத்தினால், அதிர்ச்சிக்கு உள்ளாகிய பாதிக்கப்பட்டவர்களுக்கும் உளவியல் ரீதியில் உதவுவதற்காக, தேசிய நல அறக்கட்டளையின் ஆலோசகர்களையும் தமது தரப்பு பணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Source : Bernama
#PetronasGasPipelineAccident
#PPS
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews