கோலாலம்பூர், 27/03/2025 : சரவாக், ஶ்ரீ மீரியில் உள்ள முகாமில் மரணமடைந்த பிரேபெட், முஹமட் முக்ரிஸ் அசெரி தொடர்பான மரண விசாரணையை நிறைவு செய்யும் பொறுப்பை தற்காப்பு அமைச்சு, அரச மலேசிய போலீஸ் படையிடம் ஒப்படைத்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் தங்கள் தரப்பு வழங்கும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
“இதுபோன்ற விவகாரங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். (அந்த விசாரணையின்) விளைவாக இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க எப்படி உறுதி செய்வது என்பதைக் கவனிப்போம்,” என்றார் அவர்.
கோலாலம்பூரில், இன்று ராணுவப்படை நிதி வாரியம், எல்டிஏடி-இன் ஈவுத்தொகை அறிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் அவ்வாறு கூறினார்.
மேலும், இச்சம்பவத்ததை மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்துடன் தொடர்புபடுத்த வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
ஶ்ரீ மீரியில் உள்ள முகாமில் அரச மலாய் இராணுவ படையின் 20-வது பிரிவு Batalion-னைச் சேர்ந்த 21 வயதுடைய பிரேபெட் வீரர் முஹமட் முக்ரிஸ் அசெரி, கடந்த திங்கட்கிழமை அதிர்ச்சியில் மயங்கி விழுந்தில் ஏற்பட்ட இதய கோளாரினால் உயிரிழந்ததாக இராணுவப் படை அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவரின் மரணம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக 22 மற்றும் 24 வயதுடைய இரு பிரேபெட் இராணுவ வீரர்களை போலீசார் கைது செய்தனர்.
Source : Bernama
#PDRM
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews