கோலாலம்பூர், 27/03/2025 : நேற்றிரவு, கோலாலம்பூரிலிருந்து சீனா, ஷென்ஸெனை நோக்கி புறப்பட்ட ஏர்ஆசியா விமானத்தின் வலதுபுற இயந்திரம் தீப்பிடித்ததால் அவ்விமானம் மீண்டும் கோலாலம்பூரில் அவசரமாகத் தரையிறங்கிய சம்பவம் தொடர்பில் அந்நிறுவனம் அறிக்கையை வெளியிடும்.
இச்சம்பவம் குறித்து மலேசிய பொது விமானப் போக்குவரத்து ஆணையம், சிஏஏஎம்-இடமிருந்து தாம் தகவலைப் பெற்றதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
“நேற்றிரவு மலேசிய பொது விமானப் போக்குவரத்து ஆணையத்திடமிருந்து எனக்கு முதற்கட்ட அறிக்கை கிடைத்தது. உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து ஏர் ஆசியா ஒரு அறிக்கையை வெளியிடும் என்று நான் நினைக்கிறேன். இந்நேரத்தில், எதனையும் முன்கூட்டியே தடுக்க நான் விரும்பவில்லை. அதிகாரிகள் வழக்கமான நடைமுறையில் விசாரிக்கட்டும். எந்தவோர் அவசர தரையிறக்கமும் மலேசிய பொது விமானப் போக்குவரத்து ஆணையத்தால் முழுமையாக விசாரிக்கப்படும். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண ஏர் ஆசியா விரைவில் அறிக்கையை வெளியிடும் என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாக, மலேசிய பொது விமானப் போக்குவரத்து ஆணையம் சரியான விசாரணையை மேற்கொள்ளும்,” என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூர், ஜாலான் செராஸில் Rapid KL On-Demand சேவையை பார்வையிட்டப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
ஏகே128 விமானத்தில் பயணித்த 171 பயணிகளும் ஏர் ஆசியா விமான பணியாளர்களும் அச்சம்பவத்தினால் மிகவும் பதற்றமான சூழலை எதிர்கொண்டனர்.
Source : Bernama
#AnthonyLoke
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews