ஜோகூரில் ஆடவர் பலி; 9 பேருக்கு தடுப்புக்காவல்

ஜோகூரில் ஆடவர் பலி; 9 பேருக்கு தடுப்புக்காவல்

ஜோகூர் பாரு, 27/03/2025 : ஜோகூர் பாரு, தாமான் செதியா இண்டாவில் உள்ள உணவகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், ஆடவர் ஒருவர் பலியானது தொடர்பான விசாரணைக்கு உதவும் நோக்கில், குண்டர் கும்பலில் தொடர்புடையதாக நம்பப்படும் சந்தேக நபர்கள் ஒன்பது பேர், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

36-ரில் இருந்து 66 வயதுக்குட்பட்ட அந்த ஆடவர்கள் அனைவரும், மார்ச் 8 மற்றும் 17 ஆகிய தேதிகளில், அந்நகரின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் கைதானதாக ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

அந்த ஒன்பது பேரும் கைது செய்யப்படுவதற்கு முன்னர், அக்கும்பலில் தொடர்புடைய 64 வயதுடைய மற்றொரு நபர்,

முதல் நடவடிக்கையின் போது போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.

“2025 மார்ச் 8-ஆம் தேதி பின்னிரவு மணி 3.10 அளவில் தாமான் மோலெக் பகுதியில், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் சந்தேக நபர்களில் ஒருவரை போலீஸ் கண்டுபிடிக்க முடிந்தது. கைது செய்யும் முயற்சியில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது. அந்த சந்தேக நபரை வீழ்த்துவதில் போலீஸ் வெற்றி கண்டது. 64 வயதுடைய அவர், உள்நாட்டவர் ஆவார்”, என்றார் அவர்.

இன்று, ஜோகூர் பாரு போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எம். குமார் அவ்வாறு கூறினார்.

சோதனை நடவடிக்கையில், இரு துப்பாக்கிகள், சில தோட்டாக்கள் மற்றும் ஹரோயின் ரக போதைப்பொருளையும் போலீஸ் கைப்பற்றியதாக அவர் குறிப்பிட்டார்.

Source : Bernama

#Johor
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews