கூச்சிங், 26/03/2025 : கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி கூச்சிங் ஜாலான் செமாப்பாவில் உள்ள கடை ஒன்றில் சரவாக் மாநில அரச மலேசிய சுங்கத் துறை JKDM மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஒரு கோடியே 26 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு முத்திரைகள் கொண்ட கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், அச்சோதனை நடவடிக்கையில் 44 வயதான ஆடவர் ஒருவரையும் தமது தரப்பு கைது செய்ததாக, சரவாக் மாநில சுங்கத்துறை இயக்குநர் நோரிசான் யாஹ்யா தெரிவித்தார்.
அக்கடையில் மேற்கொண்ட சோதனையின் போது, பல்வேறு வகையிலான, ஒரு கோடியே 66 லட்சத்து 50 ஆயிரம் சிகரெட்டுகளை சுங்கத்துறை உறுப்பினர்கள் கண்டெடுத்தனர்.
சுமார் 14 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் மதிப்பினான, அவற்றின் மொத்த வரி 11,142,864 என்று கணிக்கப்பட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் நோரிசான் யாஹ்யா கூறினார்.
“கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு, 1,499,040 ரிங்கிட் என்ற நிலையில், அவற்றிற்கான மொத்த வரி, ஒரு கோடியே 11 லட்சத்து 42 ஆயிரம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து அந்த சிகரெட்டுகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் வாகனம் என்று நம்பப்படும் 80,000 ரிங்கிட் மதிப்புடைய ‘டொயாட்டா’ ரக லாரி ஒன்றையும் சுங்கத் துறையினர் கைப்பற்றினர்,” என்றார் அவர்.
உட்புறப் பகுதியில் அமைந்துள்ள பெயரிடப்படாத அக்கடை, உள்ளூர் சந்தையில் விநியோகிக்கப்படுவதற்கு முன்னதாக சிகரெட்டுகள் சேமித்து வைக்கப்படும் இடமாக இருந்துள்ளதையும் நோரிசன் சுட்டிக்காட்டினார்.
1967-ஆம் ஆண்டு சுங்கத்துறை சட்டம், செக்ஷன் 135(1) (d)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
Source : Bernama
#Kuching
#JKDM
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews