சபாவில் அதிரடி சோதனை – 878,858 ரிங்கிட் மதிப்புடைய தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்

சபாவில் அதிரடி சோதனை - 878,858 ரிங்கிட் மதிப்புடைய தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்

கோத்தா கினாபாலு, 26/03/2025 : அண்மையில் சபா மாநிலத்தில் மேற்கொண்ட நான்கு சோதனை நடவடிக்கைகளில் மதுபானங்கள், சிகெரட் மற்றும் மின்சார பொருட்கள் உட்பட மொத்தம் எட்டு லட்சத்து 78 ஆயிரத்து 858 ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் பொருட்களை மாநில அரச மலேசிய சுங்கத்துறை JKDM, பறிமுதல் செய்தது.

வேறொரு பொருட்களாக கூறப்பட்டு, உள்நாட்டு சந்தைகளில் விற்பதற்காக அந்த
அனைத்து பொருட்களும் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுவதாக சபா JKDM இடைக்கால துணைத் தலைவர் சைடின் ஜலாலுடின் தெரிவித்தார்.

“முதல் வழக்கில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 332 ரிங்கிட் மதிப்புடைய மதுபானங்கள் மற்றும் அவற்றின் மொத்த வரி மதிப்பாக ஆறு லட்சத்து 45 ஆயிரத்து 705 ரிங்கிட் என மொத்தமாக அதன் மதிப்பீடு எட்டு லட்சத்து ஒன்பதாயிரத்து 28 ரிங்கிட் ஆகும்,” என்றார் அவர்.

கோத்தா கினாபாலுவில் உள்ள ஒரு கடையில் பிற்பகல் மணி இரண்டு அளவில் சுங்கத் துறையினர் மேற்கொண்ட இச்சோதனை நடவடிக்கையில், 2,144 ரிங்கிட் மதிப்புடைய 751.16 லிட்டர் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன.

அதன் வரித் தொகை, 6,723 ரிங்கிட் ஆகும்.

மற்றொரு நிலவரத்தில் இம்மாதத்தில் ஐந்து மற்றும் ஏழாம் தேதிகளில் தாவாவில் உள்ள தோட்டப்புறம் மற்றும் tamu Brumas சந்தையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 25,015 மதிப்புடைய 26,726 சிகெரட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக சைடின் ஜலாலுடின் தெரிவித்தார்.

Source : Bernama

#Sabah
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews