பாங்கி, 26/03/2025 : ஒரு பகுதியில் போதைப் பொருள் ஆய்வகங்கள் இருப்பதைக் கண்டறிய, கழிவுநீர் அமைப்புகளில் போதைப் பொருள் எச்ச பகுப்பாய்வை, அரச மலேசிய போலீஸ் படை தற்போது பயன்படுத்துகிறது.
இந்த அணுகுமுறை, நாட்டில் பயன்படுத்தப்படும் புதிய வகை போதைப் பொருளை கண்டறியும் திறன் கொண்டுள்ளதோடு, அது உள்நாட்டில் உள்ளதா அல்லது வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டதா என்பதையும் அடையாளம் காணும் என்று, தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.
”இது ஆரம்ப கட்டம் மட்டுமே. ஏனென்றால், நாம் ஒரு குடியிருப்புப் பகுதியை அடையாளம் காணும்போது, அதை கண்காணிக்க நாம் உளவுத் தகவல்களைப் பெற வேண்டும். இது நமக்கு நிறைய உதவும். இதற்கு முன்னர் இந்த அணுகுமுறை நம்மிடம் இல்லையென்பதால், நாம் எங்கு குறிவைப்பது என்று தெரியாது. உதாரணமாக, குடியிருப்புப் பகுதியில் இந்த கழிவுப் பொருட்கள் இருந்தால், இந்த தகவலைக் கொண்டு, நாங்கள் சோதனை செய்வோம்,” என்றார் அவர்.
இன்று, பாங்கி மலேசிய தேசிய பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற Tims-tof உபகரணத்தின் திறப்பு விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அயோப் கான் அத்தகவல்களைக் கூறினார்.
அண்மையில், சுபாங் பள்ளத்தாக்கில், கழிவுநீரில் எச்ச பகுப்பாய்வை மேற்கொண்டதில், மெத்தபெத்தாமின் மற்றும் புதிய வகை போதைப்பொருள் Fentanyl இருப்பது கண்டறியப்பட்டதோடு, அப்பகுதியில் போதைப் பொருள் பதப்படுத்தும் ஆய்வகம் இருப்பதற்கான சாத்தியத்தையும் குறித்ததாக அவர் விவரித்தார்.
Source : Bernama
#Forensics
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews