இல்லாத ஒரு வேலை வாய்ப்பை நம்பி 120,000 ரிங்கிட் இழப்பு

இல்லாத ஒரு வேலை வாய்ப்பை நம்பி 120,000 ரிங்கிட் இழப்பு

ஜோகூர் பாரு, 26/03/2025 : கடந்த ஜனவரியில் இணையம் வழி இல்லாத ஒரு வேலை வாய்ப்பை நம்பி ஒரு லட்சத்து 20-ஆயிரம் ரிங்கிட்டிற்கும் அதிகமான இழப்பை வியாபாரி ஒருவர் எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த ஜனவரி 24-ஆம் தேதி, அந்த 38 வயதான ஆடவர் Google இணையத் தளத்தில் அவ்வேலை வாய்ப்புக்கான இணைப்பை கண்டதாகவும் தொடர் தகவலுக்காக அதனை அழுத்தியதாகவும் ஶ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமட் சொஹாய்மி இஷாக் தெரிவித்தார்.

தாம் செய்யும் ஒவ்வொரு விற்பனைக்கும் அதிக லாபம் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்ட விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு பிப்ரவரி மூன்று தொடங்கி
28-ஆம் தேதி வரை ஐந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு, 120,873 ரிங்கிட் 69 சென்னை 11 பரிவர்த்தனைகளில் அவ்வாடவர் மேற்கொண்டதாக அவர் கூறினார்.

தாம் செலுத்திய அப்பணம் மீண்டும் பெறப்படாததால் தாம் மோசடிக்கு ஆளாகியதை அவ்வாடவர் உணர்ந்துள்ளார்.

இந்நிலையில், லாபத்தை திரும்பப் பெறவும் அக்கணக்கை மூடவும் கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

‘semak mule CCID’ தளத்தில் நடத்தப்பட்ட தொடக்கக்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட அந்த ஐந்து கணக்குகளிலும் முதலீட்டு மோசடி வழக்குகள் மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்புகள் தொடர்பிலான 22 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாக முஹமட் சொஹாய்மி குறிப்பிட்டார்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 420-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

Source : Bernama

#MohdSohaimiIshak
#Johor
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews