வட மண்டலத்திற்கான சேவையை KTM KOMUTER அதிகரிக்கும்

வட மண்டலத்திற்கான சேவையை KTM KOMUTER அதிகரிக்கும்

கோலாலம்பூர், 26/03/2025 : 12 புதிய மின்சார ரயில் பெட்டிகளை அதிகரிப்பதாக, போக்குவரத்து அமைச்சு திங்கட்கிழமை அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, KERETAPI TANAH MELAYU நிறுவனம், KTMB, வடக்கு மண்டலத்திற்கான KTM Komuter சேவையை அதிகரிக்கும்.

12 புதிய மின்சார ரயில் பெட்டிகளை அதிகரிப்பதால், தற்போதுள்ள பயணிகளின் எண்ணிக்கையில் இருந்து, பயணிகளின் கொள்ளளவை அதிகரிக்க முடியும் என்று, KTMB தலைமை செயல்பாட்டு அதிகாரி முஹ்மட் சைன் மாட் தாஹா தெரிவித்தார்.

”உண்மையில் வடக்கில் உள்ள தமது பயணிகளுக்கு அவ்வப்போது சேவையை வழங்குவதற்கு அங்குள்ள அரசாங்க சேவையை மேம்படுத்த வேண்டிய அவசியம் KTMB-க்கு உள்ளது. எனவே, புதிய பெட்டிகளின் வழி மொத்த கொள்ளளவை அதிகரிக்க முடியும். வடக்கில் உள்ள இரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். குறிப்பாக, கணினிமய இரயில்களுக்கு,” என்றார் அவர்.

28 கோடியே 30 லட்சம் கோடி ரிங்கிட் மதிப்பில் 12 புதிய மின்சார ரயில் பெட்டிகளை வாங்கியதாக போக்குவரத்து அமைச்சு திங்கட்கிழமை அறிவித்திருந்தது.

36 மாதங்களில் கட்டம் கட்டமாக ரயில் பெட்டிகளை CRRC Rolling Stock Center நிறுவனம் ஒப்படைக்கும் என்று முஹ்மட் சைன் கூறினார்.

Source : Bernama

#KTMB
#KTMKomuter
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews