நோன்பு பெருநாள் முதல் தினத்தில் கூடுதலாக 5GB இணைய சேவை

நோன்பு பெருநாள் முதல் தினத்தில் கூடுதலாக 5GB இணைய சேவை

புத்ராஜெயா, 26/03/2025 : தொலைத்தொடர்பு சேவைகளைப் பயன்படுத்தும் மலேசியர் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் முதல் நாளில், ரஹ்மா தள்ளுபடி சலுகைகளை வழங்கவிருப்பதாக, தொடர்பு அமைச்சின் வாயிலாக மடானி அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

ரஹ்மா தள்ளுபடி சலுகை, முன்பணம் செலுத்தும் பயனர் மற்றும் சேவைக்கு பிந்தைய கட்டணம் செலுத்தும் அனைத்து மலேசியர்களுக்கும் கூடுதலான 5GB இணைய சேவை வழங்கப்படுவதாக, தொடர்பு அமைச்சரும் மடானி அரசாங்கத்தின் பேச்சாளருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் நிறுவனத்தின் சில நிபந்தனை மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும் அந்த கூடுதல் இணைய சேவை, குறைந்தபட்சம் 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் என்றும் ஃபஹ்மி கூறினார்.

ஊக்கத்தொகையை நடைமுறைப்படுத்துவதற்கான செலவு குறித்து பேசிய FAHMI, தொடர்பு அமைச்சுடன் முதல் முறையாக இணைந்து மேற்கொள்ளப்படவிருக்கும்,
இத்திட்டத்திற்கான செலவை, சம்பந்தப்பட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் முழுமையாக ஏற்றுக் கொண்டதாகக் கூறினார்.

இது தொடர்பிலான மேல் விவரங்களை தொலைத்தொடர்பு சேவை அறிவிக்கும் என்றும் ஃபஹ்மிI தெரிவித்தார்.

Source : Bernama

#FahmiFadzil
#Raya
#5GService
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews