ஜோகூர் பாரு, 11/03/2025 : ஜோகூர் பாருவில் உள்ள தாமான் யூனிவர்சிட்டி பகுதியில், மார்ச் 5-ஆம் தேதி மேற்கொண்ட சோதனையில் போலீசார் 3 லட்சத்து 46 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கைப்பற்றியதோடு, மூன்று ஆடவர்களையும் கைது செய்துள்ளனர்.
அதன் பின்னர், சில்லறை விற்பனை கடையில் இயங்கும் போதைப் பொருள் கடத்தல் கும்பலையும் அவர்கள் முறியடித்துள்ளதாக வடக்கு ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் மஹின்டர் சிங் கூறினார்.
மாலை மணி 7-க்கு நடத்தப்பட்ட அச்சோதனை நடவடிக்கையில், 3 லட்சத்து 46 ஆயிரத்து 225 ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சம்பந்தப்பட்ட அவ்வளாகம் போதைப்பொருள்களைச் சேகரித்து விநியோகம் செய்வதற்கான இடமாக பயன்படுத்தப்படலாம் என்று நம்பப்படுவதாக, ஏசிபி பல்வீர் சிங் மஹின்டர் சிங் கூறினார்.
“ஜனவரி முதல் செயலில் இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களில் ஒருவர் அங்கு வேலை செய்கிறார், மற்ற இருவரும் நண்பர்கள் என்று நம்பப்படுகிறது. ஆனால், நாங்கள் இன்னும் விசாரணை நடத்தி வருகிறோம்”, என்று அவர் கூறினார்.
வடக்கு ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைமையகத்தில், இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அவர் அவ்வாறு கூறினார்.
1 கிலோகிராமிற்கும் மேற்பட்ட ஷாபு, 1.84 கிலோகிராம் EKSTASI மற்றும் 1 கிலோகிராம் கஞ்ஜா வகை போதைப்பொருள்கள் உட்பட எட்டு வாகனங்களையும் 1,000 ரிங்கிட் மதிப்புடைய ரொக்கப் பணத்தையும் தங்கள் தரப்பு கைப்பற்றியதாக, அவர் கூறினார்.
Source : Bernama
#DrugTraffickers
#Johor
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.