கோலாலம்பூர், 11/03/2025 : மீட்பு நடவடிக்கை மற்றும் அவசரக்கால பணிகள் சீராக நடைபெறுவதை உறுதிச் செய்வதற்காக, 496 தீயணைப்பு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளிலிருந்து, 20 விழுக்காட்டினரை மட்டுமே, இவ்வாண்டு நோன்பு பெருநாளுக்கு விடுமுறை எடுக்க, மலாக்கா மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அனுமதி வழங்கியுள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலும், உறுப்பினர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதன் அம்மாநில இயக்குனர் முஹமட் ஃபிசார் அசிச் கூறினார்.
அவசர நேரத்தில் பயன்படுத்தப்படும் தளவாட உபகரணங்கள் நல்ல நிலையில் இருப்பதையும், தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் அவற்றை எடுத்து கொண்டு செல்வதை, மலாக்கா மாநில ஜேபிபிஎம் உறுதிச் செய்து வருவதாக, முஹமட் ஃபிசார் விவரித்தார்.
தீ விபத்துகள் மட்டுமின்றி சாலை விபத்துகள், வெள்ளம் மற்றும் நீரில் மூழ்கும் சம்பவங்கள் போன்ற பல்வேறு அவசரகால சூழ்நிலைகளை எதிர்கொள்ளவும், மலாக்கா ஜேபிபிஎம் எப்போதும் தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டு, நோன்பு பெருநாளை முன்னிட்டு நீண்ட விடுமுறை வழங்கப்படுவதால், தேவையற்ற சம்பவங்கள் நிகழாமல், பெருநாள் கொண்டாட்டங்கள் சுமூகமாக நடைபெறும் என்று தமது தரப்பு நம்புவதாகவும் முஹமட் ஃபிசார் கூறினார்.
Source : Bernama
#JBPM
#Bomba
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.