பத்து மலை, 08/02/2025 : க்ளீன் தைப்பூசம் முன்னெடுப்பு 5 வது ஆண்டாக இந்த முறையும் தைப்பூச வளாகங்களை சுத்தமாக வைத்திருக்கும் தன்னார்வு முயற்சியை துவங்கியுள்ளனர். 2025 தைப்பூசத்தை முன்னிட்டு பத்து மலை, பினாங்கு, ஈப்போ, சுங்கை பட்டாணி மற்றும் மாசாய், ஜோகூரில் க்ளீன் தைப்பூசம் தொண்டர்கள் சேவையாற்ற இருக்கிறார்கள்.
2025 பிப்ரவரி 08 ஆம் துவங்கி 11ஆம் தேதி வரை இந்த சேவையை அவர்கள் மேற்கூறிய ஐந்து தைப்பூச தளங்களில் செய்ய இருக்கிறார்கள். 08/02/2025 இன்று பத்து மலையில் இந்த சேவையை இந்த குழுவினர் துவங்கினர். குப்பைகளை சேகரித்து குப்பை கூடைகளில் போடுவது. ஆற்றங்கரையில் பழ வங்கி வைத்து பழங்களை சேகரித்தல், தைப்பூசத்திற்கு வரும் பக்தர்களிடம் பதாகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என இன்று அவர்களின் சேவையை துவங்கினர். இந்த நான்கு நாட்களுக்கு ஐந்து தளங்களிலும் க்ளீன் தைப்பூசம் குழுவினர் சுமார் 650 தன்னார்வலர்களுடன் இந்த சேவையை செய்ய இருக்கிறார்கள். பல்வேறு நிறுவனங்கள் இவர்களின் இந்த முயற்சிக்கு தங்களால் ஆன உதவியை செய்து வருகிறார்கள். இவர்களின் இந்த தன்னலமற்ற சேவையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
பொது மக்களும் பக்தர்களும் குப்பைகளை கண்ட இடங்களில் வீசாமல் அதற்காக வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகளில் போடுவதன் மூலம் இவர்களின் இந்த பணியை எளிமையாக்க முடியும். அத்தகைய அறிவார்ந்த சமூகமாக நாம் மாற வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமாகவும் இருக்கிறது.
க்ளீன் தைப்பூசம் குழுவினருக்கும் தன்னார்வலர்களுக்கும் இந்த வேளையில் என் தமிழ் ஊடகம் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
Source : Entamizh News Division
#CleanThaipusam
#Thaipusam
#Thaipusam2025
#ThaipusamInMalaysia
#BatuCaves
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.