பாகிஸ்தான் விவசாயிகள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது
ஹைதராபாத்[பாகிஸ்தான்], 27/04/2025 : இத்தாக்குதலினால் பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா உடனடியாக ரத்து செய்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் விவசாயிகள் மத்தியில் தங்களின் எதிர்காலம் குறித்து அச்சம் எழுந்துள்ளது.
வெப்பம் அதிகரித்து வருவதோடு, ஆற்றின் நீர் மட்டமும் குறைந்து வருவதால் விவசாயிகள் நீர் விநியோகம் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.
“அவர்கள் தண்ணீரை நிறுத்தினால், இவை அனைத்தும் பாலைவனமாக மாறிவிடும். முழு நாடும். அடிப்படைப் பிரச்சினை தண்ணீர். தண்ணீர் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. தண்ணீர் வந்தால், அது செழிப்பைத் தரும். இல்லையெனில் நாங்கள் பசியால் இறந்துவிடுவோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த ஒப்பந்தத்தின் விலை நாற்பதாயிரம் ரூபாய். ஒரு ஏக்கருக்கு 20,000 ரூபாய் விலை. தண்ணீர் இல்லையென்றால் விவசாயம் இருக்காது”, என்று விவசாயி ஹோம்லா தாக்கூர் கூறினார்.
அண்மைய சில ஆண்டுகளாக மழை குறைவாகவே பெய்து வருவதால், தாகூரின் அச்சத்தை 15க்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய விவசாயிகளும் பல நிபுணர்களும் தெரிவித்தனர்.
இதனிடையே, 1947-ஆம் ஆண்டு பிரிந்ததிலிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் நான்கு போர்களைச் சந்தித்துள்ளன.
எனினும், இந்த ஒப்பந்தத்தில் பாதிப்பு ஏற்படாத நிலையில் இந்த இடைநீக்கம் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை காட்டுவதாக பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர், பிலாவால் பூட்டோ சர்தாரி தெரிவித்தார்.
“என்னுடைய மிகப்பெரிய கவலை என்னவென்றால், நாம் ஏற்கனவே தலைமுறை தலைமுறையாக மோதல்களில் சிக்கி இருக்கிறோம் என்பதுதான். நாங்கள் ஒரு காரணத்திற்காக அல்லது இன்னொரு காரணத்திற்காக தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறோம். மேலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதன் மூலம் கடந்த காலங்களில் அந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்று நம்புகிறோம். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலின் புதிய சூழலில் எதிர்கால தலைமுறையினரை நாம் அடைத்து வைக்கிறோம் என்று நான் நம்புகிறேன். அது நடக்கக்கூடாது”, என்று பாகிஸ்தானின் வெளியுறவு முன்னாள் அமைச்சர் பிலாவால் பூட்டோ சர்தாரி கூறினார்.
உலக வங்கியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முதன்முறையாக, இந்தியா கடந்த புதன்கிழமை ரத்து செய்தது.
Source : Bernama
#PakistanIndia
#IndusWatersTreaty
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews