கோலாலம்பூர், 08/02/2025 : கடந்த ஜனவரி 14-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தெக்கூனிற்கு ஒதுக்கப்பட்ட 10 கோடி ரிங்கிட்டில் 36 லட்சம் ரிங்கிட் இந்திய சமூகத்தைச் சேர்ந்த 143 தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்தொகை, SPUMI எனப்படும் இந்திய தொழில்முனைவோர் கடனுதவி மற்றும் SPUMI Goes Big திட்டம் வழி தெக்கூன் நிதிக்கு விண்ணப்பித்த தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
அந்த 36 லட்சம் ரிங்கிட்டில் ஐந்து லட்சத்து 55,000 ரிங்கிட் SPUMI Goes Big திட்டம் வழி 14 தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டதாக ரமணன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
மேலும், 30 லட்சத்து 61 ஆயிரம் ரிங்கிட் SPUMI திட்டம் வழி 129 தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டது.
10 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டை விநியோகிக்கும் பணிகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய, ஒவ்வொரு மாதமும் நடைபெறும் SPUMI மற்றும் SPUMI Goes Big கண்காணிப்புக் கூட்டத்திற்கு தாம் தலைமை ஏற்கவிருப்பதாக அவர் கூறினார்.
Source : Bernama
#DatukSeriRamananRamakrishnan
#SPUMI
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia