அரசுத் திட்டங்களில் மக்கள் நேர்மறை எண்ணங்களைக் கொண்டிருக்க நெருக்கமான ஒத்துழைப்பு விரிவுபடுத்த வேண்டும்

அரசுத் திட்டங்களில் மக்கள் நேர்மறை எண்ணங்களைக் கொண்டிருக்க நெருக்கமான ஒத்துழைப்பு விரிவுபடுத்த வேண்டும்

புக்கிட் ஜாலில், 08/02/2025 : ஒவ்வொரு அரசாங்கத் திட்டமும் மக்கள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதிசெய்ய, சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள சமூகத்தினருக்கும் அது தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பும் விரிவான ஈடுபாடும் மிகவும் அவசியம்.

சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள சமூகத்தினரின் ஏற்புடைய பதில் மற்றும் ஈடுபட்டிருக்கும் அரசு நிறுவனங்களின் வலுவான அர்ப்பணிப்புத் தன்மை ஆகியவை, நிர்ணயிக்கப்பட்ட நோக்கங்களுக்கு ஏற்ப, ஒவ்வொரு திட்டத்தையும் வெற்றிப்படுத்த உத்தரவாதம் அளிக்க முடியும் என்று இரண்டாவது நிதியமைச்சர்  டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

”சரியான முறையில் செய்து சிறந்த வரவேற்பைப் பெற்றால், நமது வெற்றியைக் காண முடியும். வெளியில் நாம் பார்க்கும் பல தொழிமுனைவோர் வெற்றியடைந்துள்ளனர். முதலில் அவர்கள் வரும்போது அவர்களிடம் ஒன்றுமில்லை. இப்போது அவர்களுக்கு சொந்தக் கடை உள்ளது. முன்மாதிரி ஏற்கெனவே இருப்பதை நாம் பார்க்கிறோம். அதனால்தான், சந்துனி மதனி நிகழ்ச்சியை சிஐஎம்பி செய்யும் விதத்தைப் பார்க்கையில், அவர்கள் இப்போது ஆதரவு மட்டும் தரவில்லை. மாறாக, ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க விரும்புகிறோம் என்கிறார்கள்,” ‘என்றார் அவர்.

இன்று புக்கிட் ஜாலிலில் மக்கள் வீட்டு வசதித் திட்டம் பிபிஆர், சமூக மையத்தில் CIMB குழுமம் ஏற்பாடு செய்திருந்த  Satu Pemimpin Satu Kampung Santuni MADANI நிகழ்ச்சியை தொடக்கி வைத்த பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.