25/10/2024, கோலாலம்பூர் : 2025 ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் தமிழில் பகிர்வு: தொடர்புத்துறை அமைச்சின் உயர்ந்த முன்முயற்சி
2025-ஆம் வரவு செலவு கருப்பொருளான, ‘பொருளாதாரத்தை மறுசீரமைத்தல், மாற்றத்தை உருவாக்குதல், மக்களை வலுப்படுத்துதல்’ என்பதற்கேற்ப, தகவல் தொடர்பு அமைச்சு குறிப்பாக இந்திய சமூகத்திற்கு, 2025- ம் ஆண்டு பொருளாதார வரவு செலவு தாக்கல் பற்றிய தகவல்களைப் பரப்புவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தொடர்புத் துறை அமைச்சரான YB ஃபாஹ்மி ஃபட்சில் தமது அமைச்சின் கீழ் உள்ள இலாக்காகளுடன் சரியானத் தகவல் பரப்பும் உத்திகளைக் கண்டறிய ஒரு கலந்துரையாடல் சந்திப்பை நடத்தினார்.
நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2025-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தைத் தாக்கல் செய்த பின், இந்திய சமூகத்திற்கு உதவ பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டாலும், எதிர்மறை நோக்கம் கொண்ட சிலர் மடானி அரசாங்கம் இந்திய சமூகத்தை ஓரங்கட்டுகிறது என பல முரண்பாடான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்.
பெரும்பாலான இந்திய சமூகத்தினர் 2025-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் துல்லியமானத் தகவல்களை அறிந்தில்லா சூழலில், மடானி அரசாங்கத்தின் மேல் தவறான அபிப்பிரயாத்தை இந்தியர்களிடையே உருவாக்கியுள்ளது. இத்தகைய பிரச்சனைகளைக் களையவும், அவர்கள் உண்மையானத் தகவல்களைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் சரியான மற்றும் துல்லியமான தகவல்கள் தமிழில் வழங்கப்படும்.
சமூகத்தின் நலன் கருதி, சரியானத் தகவல்களை மட்டும் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.