என் தமிழ்

குழாய் இணைப்பின் மூலம் வீடுகளுக்கு நேரடி சமையல் எரிவாயு: பிரதமர் மோடி

திருச்சி, 11 மார்ச் 2026 : திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரூ.5,665 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

370 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊரக சாலைகளை இன்று தொடங்கி வைத்துள்ளோம். இந்த சாலைகள் அனைத்தும் பிரதமர் மந்திரி கிராம சடக் யோஜனா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன. இச்சாலைகள் வெறும் போக்குவரத்துக்கான வசதியாக மட்டும் இல்லாமல், கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான முக்கியமான கட்டமைப்பாகவும் அமையும்.

மேலும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் திட்டத்தின் மூலம் ரூ.3,700 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த திட்டம் தமிழ்நாட்டின் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு பெரும் பயனளிக்கும்.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 9 லட்சம் குடும்பங்களுக்கும் நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்களுக்கும் குழாய் வழியாக இயற்கை எரிவாயு வழங்கப்படும். குழாய் இணைப்பின் மூலம் இயற்கை எரிவாயு நேரடியாக வீடுகளுக்கு சென்றடைவதால், மக்களின் அன்றாட வாழ்க்கை மேலும் சுலபமாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Scroll to Top