கோலாலம்பூர், 02/10/2024 : மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துவரும் பதற்றத்தை தணிப்பதோடு, நிலைத்தன்மையைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக குறைக்கும்படி அங்குள்ள அனைத்து தரப்பினரையும் மலேசியா கடுமையாக வலியுறுத்தியது.
பகைமையைக் குறைத்து வட்டார மோதல்களைத் தடுப்பதற்கான சூழலை உருவாக்க சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலேசியா அறிவுறுத்துவதாகவும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
லெபனான், ஷரியா மற்றும் யமான் ஆகிய நாடுகளில் தொடர் தாக்குதல்கள், காசா மற்றும் மேற்கு கரைகளில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் இனப்படுகொலைகள் ஆகியவை உலக மக்களின் கவனத்தை திசைத்திருப்ப இஸ்ரேல் மேற்கொள்ளும் முயற்சிகள் என்று முகநூலில் பதிவில் அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆபத்தான நடவடிக்கை மேலும் பல தரப்பினரையும் இதில் ஈடுபடுத்தும் என்று அஞ்சப்படுகின்றது.
அதோடு, நிலையற்ற தன்மையையும் அழிவையும் அதிகப்படுத்தும் என்பதால் அதனைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கில் மோதல்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்து, போர் நிறுத்தம் அவசியம் தேவை என்று ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குடெரெஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.
Source : Bernama
#Anwar
#MiddleEastCrisis
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia