பொது மேகக் கணிமை; 650 கோடி அமெரிக்க டாலருக்கும் மேல் முதலீடு செய்ய ORACLE நிறுவனம் திட்டம்

பொது மேகக் கணிமை; 650 கோடி அமெரிக்க டாலருக்கும் மேல் முதலீடு செய்ய ORACLE நிறுவனம் திட்டம்

கோலாலம்பூர், 02/10/2024 : இந்நாட்டில் அதிகரித்துவரும் செயற்கை நுண்ணறிவு, ஏஐ மற்றும் மேகக் கணிமை சேவைக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மலேசியாவில் பொது மேகக் கணிமை வட்டாரத்தைத் திறக்க Oracle நிறுவனம், 650 கோடி அமெரிக்க டாலருக்கும் மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக இன்று அறிவித்தது.

மலேசியாவில் உள்ள அதன் வாடிக்கையாளர்களும் பங்காளிகளும், ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் சேவையைப் பயன்படுத்துவதோடு முக்கியமான பணிச்சுமைகளை OCI எனப்படும் Oracle மேகக் கணிமை உள்கட்டமைப்பிற்கு மாற்றவும் அவ்வட்டாரம் உதவும் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Oracle நிறுவனத்தின் 650 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீட்டை மலேசிய அரசாங்கம் வரவேற்கிறது.

நாட்டில் அதன் 36 ஆண்டு கால தடயத்தின் மற்றொரு விரிவாக்கத்தை அந்நடவடிக்கை பிரதிபலிப்பதாகவும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், தெங்கு டத்தோ ஶ்ரீ ஷவ்ரூல் அப்துல் அசிஷ் கூறியுள்ளார்.

மலேசிய நிறுவனங்கள், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிலையிலானவை தங்களின் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்த புதுமையான மற்றும் அதிநவீன ஏஐ மற்றும் மேகக் கணிமை தொழில்நுட்பங்களுடன் மேம்பாடு அடைவதையும் அந்த முதலீடு உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Source : Bernama

#OracleInvestment
#OracleInMalaysia
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.