3 கோடியே 64 லட்சத்திற்கும் மேலான போதைப் பொருள்கள் உட்பட பதப்படுத்தும் உபகரணங்கள் அழிப்பு

3 கோடியே 64 லட்சத்திற்கும் மேலான போதைப் பொருள்கள் உட்பட பதப்படுத்தும் உபகரணங்கள் அழிப்பு

கோலாலம்பூர், 02/10/2024 : 3 கோடியே 64 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகை போதைப் பொருள்கள் மற்றும் அவற்றை பதப்படுத்தும் உபகரணங்களைக் கோலாலம்பூர் போலீஸ் இன்று அப்புறப்படுத்தியது.

2003 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான 2,844 விசாரணை அறிக்கைகளுடன் தொடர்புடைய 982.287 லிட்டர்கள் மற்றும் 474.711 கிலோகிராம் எடையிலான பல்வேறு வகை போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹமாட் இசா தெரிவித்தார்.

தேசிய போலீஸ் படைத் தலைவரின் D207 கட்டளைப் படி, அந்த பொருள்கள் அனைத்தும் நெகிரி செம்பிலான், புக்கிட் பெலான்டோக்கில் கோலாலம்பூர் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழிக்கப்பட்டதாக டத்தோ ருஸ்டி முஹமாட் இசா கூறினார்.

இன்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ ருஸ்டி அவ்வாறு தெரிவித்தார்.

18,000 ரிங்கிட் மதிப்புள்ள 189.667 லிட்டர் கெத்தும் நீரும் போதைப்பொருளைப் பதப்படுத்த பயன்படுத்தப்படும் இரசாயனங்களும் இன்று அழிக்கப்பட்டன.

Source : Bernama

#Drugs
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia