தேசிய வகை குவாங் தமிழ் பள்ளியில் 04/08/2014 அன்று காலை மணி 9.30 மணியளவில் மலேசிய கல்வி துணை அமைச்சர் மாண்புமிகு பா.கமலநாதன் அவர்களுடனான சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது . பள்ளியை சுற்றி மாணவர்களுடன் மாண்புமிகு அமைச்சர் அளவலாவினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், முன்னாள் மாணவ சங்க உற்ப்பினர்கள், பள்ளி ஆசியர்கள், தொகுதி ம இ கா தலைவர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் மாண்புமிகு அமைச்சருடன் பள்ளியின் கட்டிட குறைபாடுகள், மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் பள்ளியின் வளர்ச்சி பற்றி விவாதித்த ஒரு சிறு கலந்துரையாடலும் நடைபெற்றது.