கோலாலம்பூர், 25/09/2024 : பருவமழை மாற்றக் கட்டத்தின் தொடக்கமானது செப்டம்பர் 24, 2024 அன்று தொடங்கி நவம்பர் 2024 தொடக்கம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பருவமழை மாற்றக் கட்டத்தின் தொடக்கமானது 17 மே 2024 முதல் தொடங்கிய தென்மேற்குப் பருவமழையின் முடிவைக் குறிக்கிறது.
இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது. மலேசிய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ இணையதளம், myCuaca மொபைல் பயன்பாடு மற்றும் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் மூலம் வெளியிடும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
ஆதாரம்: மலேசிய வானிலை ஆய்வு மையம்