பெரா தொகுதி ம இகா இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் செம்பிலன் செபெலா காற்பந்து போட்டிகள் நடந்தது. வெடெரன் கார்மன் fc க்கும் மெங்கார ஹரிமாய் மூடாவிற்க்கும் இடையிலான இறுதியாட்டம் நடைபெற்றது. பகாங் மாநில ம இகா தலைவரும் மத்திய செயலவை உறுப்பினருமாகிய பகாங் மாநில முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியுமான மாண்புமிகு செனட்டர் டத்தோ ர.குணசாகரன் அதிகாரபூர்வமாக கால்பந்து போட்டியை துவங்கி வைத்தார். இந்த இறுதிப் போட்டிக்கான ஆடை செலவு, விளையாட்டு உபகரணங்கள் செலவு, நடுவருக்கான செலவு, பயிற்சியாளர் கட்டணங்கள் மற்றும் இந்த போட்டிக்கான கோப்பைக்கான செலவுகள் மொத்தமாக 3500 வெள்ளியையும் டத்தோ ர. குணசேகரன் இனாமாக வழங்கினார்.