மலேசிய இந்து சங்கம் பகாங் மாநில பேரவை நடத்திய 35ஆம் ஆண்டு மாநிலத் திருமுறை ஓதும் விழா கடந்த ஞாயிறு 03/08/2014 அன்று காலை 7.30 மணிக்கு ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்திலும் தேசிய மாதிரி ஆரம்ப தமிழ் பள்ளியிலும் மெண்டாகப், பகாங் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியை பகாங் மாநில அரசாங்க அலி மெஷுவாரட் மாண்புமிகு டத்தோ ஹஜி முகமாட் ஷர்கர் பின் ஷம்சுடின் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பகாங் மாநில ம இகா தலைவரும் மத்திய செயலவை உறுப்பினருமாகிய பகாங் மாநில முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியுமான மாண்புமிகு செனட்டர் டத்தோ ர.குணசாகரன் அவர்கள் கலந்து கொண்டு போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் பகாங் மாநில இந்து சங்கத்திற்கு 10000 வெள்ளி மாணியம் வழங்குவதாக அறிவித்தார்.