மலேசிய இந்து சங்க செலாயாங் வட்டார பேரவையின் 15வது ஆண்டு திருமுறை ஓதும் விழா கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி காலை 8.00 மணிக்கு கம்போங் தெமெங்கோங் பத்து மலை ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. திருமுறை ஓதும் போட்டி, பேச்சுப் ஒட்டி, வர்ணம் தீட்டும் போட்டி, சமய விநாடி வினா போட்டி மற்றும் தமிழ் பாரம்பரிய விளையாட்டான பள்ளாங்குழி போட்டியும் நடத்தப்பட்டது. இதில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை பலரும் கலந்துகொண்டனர். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த போட்டியில் இந்த ஆண்டு அதிகமான சிறுவர்கள் திருமுறை ஓதும் போட்டியில் கலந்துகொண்டனர். மாநிலப் அளவிலான போட்டியில் ப்ங்குபெறும் வகையில் சிறப்பான போட்டியாளர்களை இந்த முறை தயார் படுத்தி உள்ளதாக செலாயாங் வட்டார பேரவையின் தலைவர் திரு. S.P. பிராபகரன் அவர்கள் கூறினார்.